தூத்துக்குடியில் வரும் 11ந்தேதி திங்கட்கிழமை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபிறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.இதில் அவர் கூறியதாவது :
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 11.07.2022 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி அளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கோரம்பள்ளம் தூத்துக்குடியில் வைத்து நடைபெறவிருக்கிறது.
இச்சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2017-18, 2018-2019, 2019-2020, 2020-21 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐடிஐ
பயிற்சியாளர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது
தோல்வியடைந்த இளைஞர்கள் ஆண், பெண் இருபாலரும அனைவரும் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறு, குறு மற்றும் பெரு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த
முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7700 முதல் ரூ.10,000 வரை
நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்நிறுவனங்களில் சேர்ந்து
ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இச்சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு
பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு ரா.கனகராஜ், பயிற்சி அலுவலர் – 6383132166 மற்றும் க.விஜயகுமார், உதவி பயிற்சி அலுவலர் – 9176698333 அவர்களையும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment