15வது வார்டு கவுன்சிலர் வி. வி.இசக்கி ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ். ஆர். ஆனந்த சேகரன், மேற்கு மண்டல தலைவர் கே. அன்னலட்சுமி,வட்ட கழக செயலாளர் பொன் பெருமாள் இலக்கிய அணி அமைப்பாளர் பி. சக்திவேல் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஞானசேகரன், அண்ணா நகர் பகுதி செயலாளர் டி.ஆர். ரவீந்திரன், மாணவர் அணி தலைவர் பரத், வழக்கறிஞர் வி. வி. இ. கணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.நலத்திட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் 15வது வார்டு பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச வேஷ்டி சேலை வழங்குதல் விழாவும் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர திமுக 15வது வார்டு சார்பில் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான என்.ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கமாக கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தார்.அதனை தொடர்ந்து 15வது வார்டு பகுதியில் உள்ள மடத்தூர் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவரும் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் இலவச சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து திரு.வி. ரத்தினம் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் சென்று மதிய உணவு வழங்கி பின்னர் அந்த பகுதி மக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் .
No comments:
Post a Comment