குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில மாவட்ட எஸ். பி.டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஆட்டோ விபத்தில் அரசு நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிக அளவில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்றதாலும், அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டுநர் சென்றதால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி செல்நவீன் என்ற 4 ½ வயது குழந்தை பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அன்றே இறந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, இனி ஆட்டோவில் செல்லும் குழந்தைகளின் எதிர்காலத்தையும், உங்களை நம்பி தங்கள் குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பிவிடும் பெற்றோர்களையும், உங்கள் குடும்பத்தாரையும் மனதில் வைத்துக்கொண்டு கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிக குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது மேலும் மதுபோதை மற்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டவேண்டும் என பல அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனையடுத்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை பார்வையிட்டு, காவல் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைக்கப்பட்டுள்ளதா எனவும், காவல் நிலைய அன்றாட பணிகள் குறித்தும், காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அந்த காவல் நிலைய போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.*
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் இலவச அவசர தொலைபேசி எண். 100 மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 95141 44100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment