சமூக பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை இரண்டாம் நிலை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தென் திருப்பேரை பகுதிகளில் குழந்தை பாதுகாப்பு பற்றியும் அவர்களின் உரிமைகள், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய சமூகக் கடமைகள் பற்றியும் ஆலோசனைகளை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பிரகாஷ் எடுத்து கூறினார்.இந்த கலந்தாய்வில் குழந்தை திருமணம் தடுப்பது பற்றியும் குழந்தைகளைப் பாலியல் முறைகளில் சுரண்டுதலை தடுப்பது பற்றியும் பள்ளிசெல்லா குழந்தைகளை கவனிக்கவும் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதற்கான சட்ட வரையறைகள் பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் கீதா, 11-வார்டு உறுப்பினர்களான குமரேசன், மாரியம்மாள்,சீதாலட்சுமி, ரேவதி, சண்முகசுந்தரம்,ஆனந்த், கோடி,லஷ்மி,சிவகாமி,பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தென்திருப்பேரை அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment