தமிழர்களின் வீர விளையாட்டுக் கலைக்குழு சார்பில் பிளாஸ்டிக்கை தடை விழிப்புணர்வு - பிரச்சாரம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 27 June 2022

தமிழர்களின் வீர விளையாட்டுக் கலைக்குழு சார்பில் பிளாஸ்டிக்கை தடை விழிப்புணர்வு - பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பிளாஸ்டிக்கை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் வீரவிளையாட்டுக்கலைக்குழு மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் சுருள் வாள்  விளையாட்டுகள் விளையாடியும்,  பாதகைகள் ஏந்தியும்
விழிப்புணர்வு ஊர்வலமாக 
ஏரலில் உள்ள முக்கிய வீதிகளிலுள்ள கடை களிலும், பேருந்து நிறுத்தங்களிலும்  சென்று மஞ்சள் பை கொடுத்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான துண்டு பிரசுரம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியை ஏரல் வட்டாட்சியர் மூ. கண்ணன் துவக்கி வைத்தார்.ஏரல் பேரூராட்சி தலைவர் ம. சர்மிளா தேவி மணிவண்ணன், துணை தலைவர் கி. ஜான் ரத்தின பாண்டி செயல் அலுவலர் என். தனசிங் ஆகியோர் முன்னிலையில் ஏரல் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எம். அருணாச்சலம், டி. கணேசன், ஜி. கண்ணன், எஸ். ஆனந்த், எஸ். சங்கர், தூத்துக்குடி மாவட்ட மாற்று திறனாளி குழுவினர்,நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.நிறைவாக நல்ல மனிதர் (அஜித் குமார் )அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad