அங்கக வேளாண்மை(organic)விதைச் சான்றளிப்பு பயிற்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 21 June 2022

அங்கக வேளாண்மை(organic)விதைச் சான்றளிப்பு பயிற்சி


அங்கக வேளாண்மை பயிற்சிக்கான அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்கள் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான  பயிற்சி ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா புரம் கிராமத்திலுள்ள சேவை மைய கட்டிடத்தில்
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது .  ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி முகாமிற்கு வந்த விவசாயிகளை வரவேற்றுப் பேசினார் இதில் பயிற்சியின் நோக்கம் குறித்தும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் முன்னாள் முதல்வர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். பயிற்சியில் தூத்துக்குடி விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் கலந்துகொண்டு அங்க விவசாயத்தின் முக்கியத்துவம், நன்மைகள், அங்கக விவசாய சான்றளிப்பு வழிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.பயிற்சியில் ஆழ்வார் திருநகரி தோட்ட கலை உதவி அலுவலர் யுவராஜ் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரை த்தார். நிகழ்ச்சி நிறைவில் அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் மாரியப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் விவசாயிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர

No comments:

Post a Comment

Post Top Ad