புதுக்கோட்டையில் முப்பெரும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 21 June 2022

புதுக்கோட்டையில் முப்பெரும் விழா

புதுக்கோட்டையில்   இலவச கண் சிகிச்சை, கண் தான விழிப்புணர்வு, மரக்கன்று வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா மரம் வரம் குழு , புனித சூசையப்பர் ஆலயத்தை சேர்ந்தவர்கள் , கலாம் நற்பணியினர், பெஜான்சிங் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவராலும் இணைந்து நடத்தப்பட்டது.மரம் வரம் குழுவின் நிர்வாக இயக்குநர் புதுக்கோட்டை ராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.புதுக்கோட்டை பங்கு தந்தை லாரன்ஸ்,ஆலய தளாளர் ரூபர்ட்,தூத்துக்குடி ரத்னா ஏஜென்சி விக்னேஷ், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ், சுகாதார துறை ஆய்வாளர்கள் ஷண்முக சுந்தரம், காமாட்சி,மீன் & நீர் வள ஆய்வாளர் அக்னிகுமார்,  சிலம்பம் பயிற்சியாளர் அருண்,சிவகார்த்திகேயன் வைஷ்ணவி ,மீனாட்சி விஜி ,லக்ஷ்மண குமார் ஈஸ்வரமூர்த்தி,  உள்பட பலர் சிறப்புரை ஆற்றினார்.  மரம் வரம் குழு செல்வராஜ் ஜேசுபாலன் சேகர்,சுடலை,கிளாஸ்டன் ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
 கலந்து கொண்ட அனைவருக்கும்  மரக்கன்றுகள் , ஆதியின் வேரைத்தேடி புத்தகம்,கம்மங்கஞ்சி உணவு ஆகியவை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad