12ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் 11ம் தேதி சனிக்கிழமை முதல் 13ம் தேதி திங்கள் கிழமை வரை 3 நாட்கள் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Tuesday, 7 June 2022
Home
திருச்செந்தூர்
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு.மாவட்ட எஸ். பி. தகவல்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு.மாவட்ட எஸ். பி. தகவல்.
Tags
# திருச்செந்தூர்
About Tamilagakural Thoothukudi
திருச்செந்தூர்
Tags
திருச்செந்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment