மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி ஆழ்வார்திருநகர் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தென்திருப் பேரையில் நடைபெற்ற பயிற்சியில் ஆழ்வார்திருநகரி வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி தலைமை ஏற்று மதிப்பு கூட்டுதல் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார். விதைச்சான்று இணை இயக்குனர் (ஓய்வு )பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தானியங்கள், பயிறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பழங்கள் மற்றும் காய்கறி போன்ற பயிர்களில் அறுவடைக்குப்பின் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கூறினார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் நல்லதம்பி நன்றியுரை கூறினார்.பயிற்சியில் ஆழ்வார் வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.
Post Top Ad
Friday, 10 June 2022
விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி
Tags
# ஆழ்வார் திருநகரி
About Tamilagakural Thoothukudi
ஆழ்வார் திருநகரி
Tags
ஆழ்வார் திருநகரி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment