வாழ்ந்து காட்டுவோம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 June 2022

வாழ்ந்து காட்டுவோம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

வாழ்ந்து காட்டுவோம் மூலம் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில்  ஆரி எம்பிராய்டரி பயிற்சி 20 பயனாளிகளுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை வட்டார தலைவர் பாலமுருகன் வரவேற்க, திறன் வளர்ப்பு செயல் அலுவலர் ராதா தொழில் மேம்பாடு செயல் அலுவலர் சேவியர் மணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தனர். பள்ளி உறுதி மொழியோடு பயிற்சி துவங்கியது. சமுதாய திறன் பள்ளி உறுதி மொழியோடு பயிற்சி துவங்கிட சேதுக்குவாய்த்தான் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad