தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 June 2022

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக  இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி ஆழ்வார்திருநகரி ஒன்றியதிருக்குட்பட்ட புன்னக்காயல் ஊராட்சியில் 
சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தால் 35 பயிற்சியாளர்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட்டது.   புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா தலைமையேற்று துவக்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி வட்டார வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணித் தலைவர் பாலமுருகன் வரவேற்புரை வழங்கினார்.ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சிறப்புரையாற்றியனார்.  பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியானது தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும்.மதிய உணவுடன் கூடிய இந்த பயிற்சியில் இருவேளை தேநீரும் வழங்கப்படும். பயிற்சி நிலைய அலுவலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுடன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொழில்சார் வல்லுனர் கரோலின்  ஒருங்கிணைப்புடன் நிகழ்ச்சி  நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad