தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த 01.11.2021 அன்று முதலமைச்சரால் சென்னை கோயம்பேடு பேரூந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நகரும் புகைப்படக்கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சென்று ஏராளமான மாணவ மாணவியர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த பேருந்தானது 06.06.2022 இன்று முதல் 08.06.2022 புதன் கிழமை வரை இரண்டு நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் தேச பற்றினையும் வரலாற்றினையும் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இந்த பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஒட்டப்பிடார சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment