கீழப்புதூரில் முதலாம்ஆண்டு கிரிக்கெட் போட்டி. முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார் . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 June 2022

கீழப்புதூரில் முதலாம்ஆண்டு கிரிக்கெட் போட்டி. முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார் .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருமலை ஊராட்சி சோழபுரம் தென்பொதிகை ராஜகம்பள வாலிபர் குழு மற்றும் குருமலை ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை அ. தி. மு. கவின் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இங்கே மிகச்சிறப்பான முறையில் முதலாம் ஆண்டு கிரிக்கெட்விளையாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்பொதிகை ராஜகம்பள வாலிபர் குழு சார்பில் கிரிக்கெட் விளையாட்டு குழு கேப்டன் சிவா,செயலாளர் சங்கர்,கிரிக்கெட் விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் செல்வ ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருக்கின்றனர். இங்கே நடைபெறும் இந்தகிரிக்கெட் விளையாட்டு குழுவினர்கள் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கு பெற்று உலக அளவில் விளங்கிட வாழ்த்துகிறேன் என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் போடுசாமி,கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம், கருப்பசாமி கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் கத்தார்,கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், சிறுபான்மை அணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் ,மாவட்ட பிரதிநிதி அருளானந்தம் ,கிளைச் செயலாளர்கள் புதூர் தங்க பாண்டியன், வீரப்பெருமாள் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad