எஸ். பியின் ஆலோசனையின் பேரில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 June 2022

எஸ். பியின் ஆலோசனையின் பேரில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் மரக்கன்றுகள் நட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய வளாகங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் முகாம் அலுவலக வளாகங்கள், ஆயுதப்படை வளாகம் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய வளாகங்களிலும், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad