அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 June 2022

அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, ஆலோசனைப்படி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
வழிகாட்டுதலின்படி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பேரூர் கழகம் சார்பாக பேருந்து நிலையம் அருகிலும்,மேடை பிள்ளையார் கோயில் அருகிலும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலும் கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து அரசு மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கியும்  கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஸ்ரீவை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கொம்பையா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுக பெருமாள், நகர கழக செயல்வீரர் சுப்புராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்  பாலமுருகன் ,மாவட்ட பிரதிநிதி  சண்முகசுந்தரம்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்ன பாண்டி,ஸ்ரீவைகுண்டம் சுடலை கண்ணு,பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.பி.அருணாச்சலம், கந்தசிவப்பு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் லட்சுமண காந்த்,ஒன்றிய இளைஞரணி அருண் கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad