பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 June 2022

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், குளத்தூரில்
 சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் கழகக் கொடியேற்றி கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி 
கேக் வெட்டியும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும் கொண்டாடினார்.
 தொடர்ந்து குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு சவிளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தங்க மோதிரம் அணிவித்தார்.மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டினார். நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்,ஒன்றிய செயலாளர்கள்,
மாவட்ட கவுன்சிலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள்,மாவட்ட இளைஞரணி துணை நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்  ஊராட்சி மன்ற தலைவர்கள்,மாவட்ட பிரதிநிதிகள், இளைஞரணி நிர்வாகிகள்,தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள்,கிளைச் செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad