உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணி. அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 June 2022

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணி. அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார்


உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எம்ஜிஆர் பூஙகா முன்பிருந்து, துவங்கிய சைக்கிள் பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 பேரணியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், சிறுவர்,சிறுமியர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலம் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து கொடுக்க வலியுறுத்தி மாநகரின் பிரதான சாலைகளில் அமைந்துள்ள கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. முன்னதாக தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் (People's movement for clean cities campaign) மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad