இலந்தப்பட்டியில் கயத்தாா் கிழக்கு ஒன்றியம் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 June 2022

இலந்தப்பட்டியில் கயத்தாா் கிழக்கு ஒன்றியம் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்அமைச்சர் 
 கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு  கயத்தாா் கிழக்கு ஒன்றியம் இலந்தப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கிளை கழகம் சார்பாக பிறந்த நாள் விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும்,கழக மகளிரணி செயலாளா் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  P. கீதாஜீவன் ஆலோசனையின்பேரில் ,கயத்தாா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஆ.சின்னப்பாண்டியன்   தலைமையில் இலந்தப்பட்டி திமுக கிளை கழகம் சார்பாக பள்ளி குழந்தைகள்,பொது மக்களுக்கு
இனிப்பு வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது..இதில்
 கிளை செயலாளர்.அ.கருத்தப்பாண்டி.,ஒன்றிய வர்த்தக அணி துனை அமைப்பாளர் கா.சின்னக்கருப்பசாமி,ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அ.அழகுராஜா,இளைஞர் அமைப்பாளர் ரா.ராமசுப்பு,இளைஞர் அணி து.அமைப்பாளர்கள்.ரா.ரமேஷ் குமார்,ச.கதீஸ்ராஜ்,
கா.மாரிமுத்து,இலந்தப்பட்டி விவசாய அணி அமைப்பாளர் கோ.கோபாலகிருஷ்ணன்,ஒன்றிய பிரதிநிதி.கி.முருகேசபாண்டியன் மற்றும் கழக   உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad