ஏரல் முக்காணி புதுக்கோட்டை ஓட்டப்பிடாராம் கோவில் பட்டி சாலை 199 லட்சம் மதிப்பீட்டில் ஆன சாலையினை அகலப்படுத்தும்
பணிகளை ஏரல் நாட்டார் திருமண மண்டபம் முன்பு இருந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஏரல் பகுதியில் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொட்டாரகுறிச்சி கணபதி சமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அரசன்குளம் சாலையில் ரூபாய் 137 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இலட்சுமிபுரம், அதிசயபுரம்,செல்வநாயகபுரம், கொட்டாரக்குறிச்சி,ஆறுமுகமங்கலம், கரையடியூர்,மாரமங்கலம்,தீப்பாச்சி, இடையர் காடு சம்படி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நிகழ்வில் மக்களும் தொண்டர்களும் பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.உடன் ஏரல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவட்டாரத் தலைவர் தாசன், நகர தலைவர் பாக்கர் அலி, கவுன்சிலர் பாரத் ஐயம்பெருமாள், பிபி சுல்தான்,சார்லின்,அந்தோணி, காந்தி, நம்மாழ்வார்,சுரேஷ்,மீனாட்சி, ஆர்.தர்மலிங்கம் சங்கரமூர்த்தி சிதம்பர குமார் மற்றும்
தி.மு.கவை சேர்ந்த எம்.எம்.ராயப்பன், பாலகிருஷ்ணன் கோரிக்கை மாறன் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment