நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 June 2022

நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி, முன்னாள் மாணவர்களின் 2021-2022ம் ஆண்டுக்கான முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் முனைவர்.கே.காளிதாச முருகவேல் தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு உறுப்பினர் சித்தமருத்துவர் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த சந்திப்பில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், குவைத், யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி போன்ற பல்வேறு பெருநகரங்களிலிருந்தும் சுமார் 270 முன்னாள் மாணவர்கள் நேரடியாகவும், இணையவழியிலும் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கை நினைவுகளை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் பெருநிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புக்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம், அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றி கல்லூரி மாணவர்களுடன் தங்கள் யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்களின் பொதுக்குழு கூட்டத்தில், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவராக ஆர்.ராஜசேகர், துணைத் தலைவராக வி.பி.பாலாஜி, செயலாளராக கே.லோகன்யா, இணைச் செயலாளராக சித்ரா ரஞ்சன், பொருளாளராக முரளிதரன் மற்றும் இணைப் பொருளாளராக கே.காசிராஜன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கே.ஜி.ஸ்ரீனிவாசகன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் வெ.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களுடன் இயக்குநர் மற்றும் முதல்வர் வழிகாட்டுதலின்படி செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad