பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 May 2022

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 66வது உற்சவ திருவிழா வருகிற 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்  பிரவேஷ் குமார் இ.கா.ப  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன்  ஆகியோர்  பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயம் மற்றும் அதன் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, எபனேசர் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad