தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021- 22 கான விழிப்புணர்வு முகாம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ஆர். சரவணகுமார் தலைமை தாங்கினார் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா, திட்டத்தின் மண்டல அலுவலர் மார்ட்டின் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தோட்டக்கலைத்துறை
துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் வேடியப்பன்,வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கிங்ஸ்டன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜெகவீரபாண்டியன், கால்நடை துறை ஆய்வாளர் ஆனந்த ராமகிருஷ்ணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஜெகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினர்.
25க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். துறை அலுவலர்கள் அனைவரும் விவசாயிகளின் சந்தேகத்திற்கு தங்கள் துறை சார்ந்த விளக்கமளித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கைத்தெளிப்பான்,நெல்நுண்ணூட்டம், தென்னை நுண்ணூட்டம், ரைசோபியம்,பாஸ்போ பாக்டீரியா, ப்ளூடூத் ஆகிய இடுபொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நிகழ்வில் விவசாயிகளுக்கு
கைத்தெளிப்பானை பஞ்சாயத்து தலைவர் ஆர். சரவணகுமார் வழங்கினார்.மேலும் விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். மாப்பிள்ளையூரணி உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment