தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வரும் 2022-2023ம் ஆண்டில் கோரம்பள்ளம் ஊராட்சி அன்னை சதுக்கம் குறுக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், முள்ளக்காடு நேசமணி நகரில் 1. கீ. மீ. தூரம் தார்சாலை அமைத்தல்,போன்ற 27 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.
இதில் வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுதர்சன்,ஆனந்தி, முத்து மாலை,அந்தோணி, தனுஷ் பாலன்,ஜெய கணபதி,மரிய செல்வி, முத்துக்குமார், முத்து லட்சுமி, செல்ல பார்வதி, நர்மதா,ஆஸ்கார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்,ராமராஜ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாசாணம், பொறியாளர்கள் செந்தில்ராஜ்,தளவாய், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment