ஆழ்வார் திருநகரியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 May 2022

ஆழ்வார் திருநகரியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

      ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றிய அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராம சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி முன்னிலை வகித்தார் ‌. அனைத்து துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைகளின் திட்டங்களைப் பற்றி பேசினார் ‌. விவசாயி சுப்பிரமணியனுக்கு கைத்தெளிப்பான் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, வேளாண் பொறியியல் துறை வேலுமணி, வேளாண் அலுவலர்கள் திருச்செல்வம், தங்க மாரியப்பன் வேளாண் உதவி அலுவலர் திருநீலகண்டன், கால்நடை டாக்டர் தாமோதரன், உழவன் நண்பன் சுப்பிரமணியன், விவசாய சங்கத் தலைவர் சங்கர் குமார், ஊராட்சி செயலர் மனுவேல், கிராம உதவியாளர் ரவிக்குமார், சிகரம் இயக்குனர் முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad