விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்
பொருட்டும் உருவாக்கப்பட்டிருந்தது.
விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" கோவில் கொடை விழாக்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அதன்விளைவாக கடந்த மே 06ம் தேதி பசுவந்தனை காவல்நிலைய எல்லையில் உள்ள மேலமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் கலந்து கொண்ட விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" சிறப்பாக விளையாடி 3-வது பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளது.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்.மேலும் காவல்துறை கபடி வீரர்கள் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment