மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 May 2022

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற  போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது  மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

மேலும் கடந்தமாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட எஸ். பி.வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் கண்ணன், போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் வசந்த், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் அசோக், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன்ராயன், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ராஜமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, தூத்துக்குடி அரசு மருத்துகல்லூரி உறைவிட மருத்துவர் சைலேஷ், தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையாளர் சந்திரமோகன், தூத்துக்குடி இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் முப்பிடாதி, பேரூரணி மாவட்ட கிளைச்சிறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி,   தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், விளாத்திக்குளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சம்பத், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad