மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக பல்வேறு துறைகளின் ஆசிரியர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் இறகு பந்து போட்டி பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கா பிச்சுமணி சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.இந்த போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடைபெற்றது தனிநபர் ஆண்கள் பிரிவில் அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் முனைவர் சுஜின் முதலிடத்தையும் கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கர பகவத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் அசோக் லிங்கம் இரண்டாமிடத்தையும் பெண்கள் பிரிவில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை முனைவர் கலாமரி முதலிடத்தையும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியை முனைவர் ஜெயந்தி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றன இதேபோல இரட்டையர் பிரிவில் மார்த்தாண்டம் நேசமனி மேமொரியல் கிறிஸ்தவ கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் டேனியல் பேரின்ப ராஜ் மற்றும் இணை பேராசிரியர் அருள் முதலிடத்தையும் நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் ஆர்தர் டேனியல் இணைப் பேராசிரியர் வின்சென்ட் ஜவகர் இரண்டாமிடத்தையும் இரட்டையர் பெண்கள் பிரிவில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை முனைவர் கள்ளரி முனைவர் மகராசி ஆகியோர் முதலிடத்தையும் குற்றாலம் பராசக்தி கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் மகேஸ்வரி மற்றும் முனைவர் அபிராமி இரண்டாம் இடத்தையும் பெற்றனர் விழாவின் துவக்கமாக மைய இயக்குனர் ஆறுமுகம் வரவேற்புரை வழங்கினார்.உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர்
துரை நன்றியுரை கூறினார் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் கன்வீனர் முனைவர் கந்தசாமி ஆண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜாக்சன் பால்துரை பெண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் பிரின்சி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் விளையாட்டு துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment