கால்பந்து பயிற்சி கூடத்தில் கொடி ஏற்று விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 May 2022

கால்பந்து பயிற்சி கூடத்தில் கொடி ஏற்று விழா

தூத்துக்குடி  எம்.எஸ்.டி. டர்பு சார்பில் இன்று கால்பந்து குழு சார்ந்த முத்திரையும் (logo)அதனைத் தொடர்ந்து முத்திரை பதித்த கொடியையும் ஏற்றும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி நண்பர்கள் கால்பந்தாட்ட குழுவைச் சார்ந்த செயலாளர் மதியழகன் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில்  மதியழகனுக்கு தினேஷ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த கொடியேற்று விழாவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் ராஜசேகரன் நோயல் மற்றும் கால்பந்தாட்ட வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். லோகோ ஆனது யுனிவர்சல் விளையாட்டை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 இந்த கால்பந்தாட்ட பயிற்சியை பற்றி சொல்லும் பொழுது கடந்த வருடம் 2021நவம்பர் மாதத்தில் இந்த கால்பந்தாட்ட கழகத்தை வில்லவராயர் தொடங்கி வைத்தார்.தற்போது இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் நேரங்கள் ஒதுக்கப்பட்டு விளையாட்டிற்கான பயிற்சியாளரை நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.வரும் காலங்களில் இந்த பயிற்சி அமைப்பையும் பயிற்சிபெறும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பல போட்டிகளையும் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad