2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக அறிவிக்கப்பட்ட சித்ராங்கதன் பேட்டி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 May 2022

2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக அறிவிக்கப்பட்ட சித்ராங்கதன் பேட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்ட சித்ராங்கதன் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உள்பட மாநில மாவட்ட பிஜேபி நிர்வாகிகளாக இருந்து மறைந்த தலைவர்கள் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்
 மாவட்ட தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
     பிரதமர் நரேந்திர மோடியின் வேகத்திற்கும் செயலுக்கும் ஏற்றார் போல் மாநில தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். அதற்கேற்றால் போல் தெற்கு மாவட்டத்தில் செயல்படுவோம் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை கைப்பற்றுவோம். அதற்கு பிரதமர் மோடி ஆட்சியில் செய்த சாதனைகள் எங்களுக்கு வெற்றியை தேடி தரும் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு கிளைக்கழக பொறுப்பாளர்கள் முழுமையாக நியமிக்கப்பட உள்ளார்கள். அதற்கான சேர்க்கைக்கு நேரடியாக சென்று நிர்வாகிகளோடு சென்று களப்பணி ஆற்றவுள்ளோம். 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெறும் அதற்கான பணிகள் முழுமையாக நடைபெற இருக்கின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகின்ற அனைத்து பணிகளும் பிரதமர் மோடியின் பார்வையில் நடைபெற்று வருகின்றன. முதன்மை துறைமுகமாக மாறுவதற்கு அனைத்து ஓத்துழைப்பையும் மத்திய அரசு அளித்து வருகிறது. என்றார்.
பின்னர் நடைபெற்ற அறிமுக கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரவீசந்திரன், அறிமுகஉரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். மாநில ஓபிசி அணி செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் வக்கீல் சந்தனகுமார், மாநில பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட இணை அமைப்பு செயலாளர் ராஜா, திருநெல்வேலி மாவட்ட பார்வையாளர் பாலாஜி, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னா மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஏற்புரைஏற்று கட்சி வளர்ச்சி குறித்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், செயலாளர்கள் வக்கீல் வாரியார், வக்கீல் நாகராஜ், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், முன்னாள் கவுன்சிலர் லதா, நிர்வாகிகள் கமலக்கண்ணன், மான்சிங், வீரமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad