மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், எஸ். பி. பரிந்துரையில் போக்சோ, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
கடந்த ஏப்ரல் 08ம் தேதி அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியிலுள்ள உள்ள ஒரு பள்ளியில் பயிலும் 9 குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், அந்த பள்ளியின் தலைமையாசிரியரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சின்னகொல்லாபட்டி பகுதியை சேர்ந்த தாமஸ் சாமுவேல் (57) அருள்சீலன் என்பவரின் மகனான இவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று கயத்தாறு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கயத்தார் அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் குருசாமி (55) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மேற்படி போச்சோ மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தாமஸ் சாமுவேல், குருசாமி ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்களும், கடந்த 14.04.2022 சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த மகாராஜா (32) சிதம்பரத்தின் மகனான இவரை சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளி மகாராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ். பி. ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் மரு.கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சின்னகொல்லாபட்டி பகுதியை சேர்ந்த அருள்சீலன் மகன் 1) தாமஸ் சாமுவேல், கயத்தார் அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் 2) குருசாமி மற்றும் கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் 3) மகாராஜா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் அவர்கள் எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுவரை இந்த ஆண்டு போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment