பெருங்குளம் செங்கோல் ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 May 2022

பெருங்குளம் செங்கோல் ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா


 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தில் செங்கோல் மடம் அமைந்துள்ளது இந்த செங்கோல் மடத்தின்  குருபூஜை விழா இன்று சிறப்பாக 
காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து திருமுறை விண்ணப்பமும், குருமூர்த்தி திருக்கோயில் வழிபாடும்,பகலில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ சத்திய ஞான தரிசினிகள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மதியம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பெண்களுக்கு  தையல் இயந்திரம், ஆன்மீகத்தில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு விருதுகளை 103 வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் ஆசி பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad