வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் பாளை., ரோடு எம்ஜிஆர் பூங்காவில் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழால் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செந்தில் ஆறுமுகம், நகர வர்த்தக மத்திய சங்க பொருளாளர் ராஜலிங்கம், கிளை தலைவர்கள் இசக்கிராஜா, ஆனந்தசேகரன், ஜெயமுருகன், சுப்ரமணியன் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், ஆய்வாளர் கண்ணன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், கந்தசாமி, ஆல் கேன் டிரஸ்ட் தலைவர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், நிர்வாகிகள் மகேஸ்வர சிங் மருதபெருமாள், ஜெயராஜ், முருகன், விக்னேஷ் உள்பட பலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment