தூத்துக்குடி பழையகாயல் கூட்டுறவு கடன் வங்கியில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஏரல் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை உடன்பாடு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்மகளிர்சுய உதவி குழுக்கள் பெயரிலும், விவசாயிகள் பயிர்க்கடன் பெயரிலும், பொதுநகைகடன் பெயரிலும், கூட்டுக் குழு கடன் பெயரிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் ஊழல் நடந்திருப்பதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் பழையகாயல் அகரம் கோவங்காடு மஞ்சள்நீர் காயல் பகுதிகளில் கள ஆய்வு செய்யப்பட்டு ஊழல் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது.மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டு 25.4.2022ல் பழையகாயலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மேற்கண்ட கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசங்கர் எழுத்தர் சரவணன் காசாளர் அன்னலட்சுமி மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு செயலாளர் ரோஸ்மலர், ஆகியோர் மீதுஉயர்மட்ட விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி வழங்க கோரியும் 12/05/2022 காலை 10மணிக்கு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழு சார்பில் அறிவிக்கபட்டு மாவட்ட ஆட்சியர்/காவல்துறை/வருவாய்த்துறை/கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைவருக்கும் தபால் அனுப்பப்பட்டது.
போராட்ட அறிவிப்பின் காரணமாக ஏரல் தாலுகா தாசில்தார் அவர்கள் தலைமையில் சமாதான கூட்டத்திற்கான அழைப்பின் பெயரில் ஏரல்தாலுகா அலுவலகத்தில் சமாதானகூட்டத்தில் சுமூக உடன்பாடு ஏற்படாதால் 12/05/2022 காலை 10 மணிக்கு பழையகாயல் கூட்டுறவு வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
புறநகர் குழு செயலாளர் பா.ராஜா, T.ஆறுமுகபாண்டி நாடார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ம.காயல், அகரம் P.சமுத்திர பாண்டி, கூட்டுறவு சங்க உறுப்பினர் D.பிரேம்சந்த், உப்பு உற்பத்தியாளர் பழையகாயல், வழக்குரைஞர் குணசேகரன், போராட்டக்குழு M.நந்த கோபால், போராட்டக்குழு ம.காயல், மஞ்சள் நீர் காயல், DSP.செல்லத்துரை, M.ராஜகோபால், ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கத்தோலிக்க திருச்சபை பங்குதந்தை பாதிரியார் அமலன் தமியோன் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பி.பூமயில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து கட்சியின் மூத்த தோழர் கே.பொன்ராஜ் புறநகர் குழு உறுப்பினர்கள் ஆ.முனியசாமி மு.சுப்பையா பா. சரஸ்வதி புல்வாவெளி கிளை செயலாளர் தோழர் எம்.பன்னீர் செல்வம் இராமசந்திர புரம் கிளை செயலாளர் எம்.பன்னீர் பக்கிள் பார்வதி மாரிமுத்து உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஊர்முக்கியஸ்தர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக் களத்திற்கு கூட்டுறவுதுறை இணை பதிவாளர் ஏரல் வட்டாட்சியர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டக் குழுவினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்கள், மேற்கண்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசங்கர் எழுத்தர் சரவணன் காசாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட ஊழலில் ஈடுபட்ட கூட்டுறவு அதிகாரிகள் அனைவரின் மீதும் நாளைய தினம் 13/05/2022 நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேற்கண்ட கூட்டுறவு வங்கியை கலைக்கப்படும் எனவும் ஊழல் முறைகேடுகள் குறித்து 90 நாட்களுக்குள் விசாரணை செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர் இதனைத் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment