தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து
தூய்மைப்படுத்தும் பணியினை முறையாக தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன் தொடக்கமாக சனிக்கிழமை காலை தூத்துக்குடி தமிழ் சாலையில்
மாநகராட்சிக்குட்பட்ட அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் துப்புரவு பணிகள் நடைபெற்றது.
இப்பணியினை, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து, தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ30.00 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட TATA ACE வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரூஸ்ரீ , மாநகர் நல அலுவலர், செயற்பொறியாளர் (பணிகள்), உதவி செயற்பொறியாளர் (பணிகள்) , சுகாதார அலுவலர்கள், உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி பூங்கா,ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை
பகுதிகளில் துப்புரவுப் பணியானது நடைபெற்றதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
No comments:
Post a Comment