அணியபரணநல்லூரில் இலவச கண்சிகிச்சைமுகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 May 2022

அணியபரணநல்லூரில் இலவச கண்சிகிச்சைமுகாம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா அணியபரணநல்லூரில் உள்ள டிஎன்டிஎ பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்காட் நிறுவனத்தலைவர் டாக்டர் கீளீட்டஸ்பாபு  வழிகாட்டுதலின் பேரில் திட்ட இயக்குனர் சார்லஸ் ஆலோசனையின் படி நடைபெற்றது.


இம்முகாமில் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் வருகை தந்து 61 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 14 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.15 நபர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்த முகாமைஊராட்சி மன்ற தலைவர் சித்திரைப்பாண்டி, துணைத் தலைவர் பெரிய துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இம்முகாமில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், தூத்துக்குடி விஜய் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதல்வர் சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி புதுக்கோட்டை வட்டாரஸ்காட் நிர்மான் பணியாளர்கள் செய்திருந்தார்கள் முகாமில் 
அல்லிக்குளம் தாமரை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad