மங்கள குறிச்சியில் வீரமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 May 2022

மங்கள குறிச்சியில் வீரமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மங்கலக்குறிச்சி அருள்மிகு வீரமாகாளி மற்றும் உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவோர் கோயிலிலிருந்து
பால்குடம் எடுத்து  ஊர்வலமாக  ஊர்சுற்றி பின்பு கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று மூலவரின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது . பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad