சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் அமைச்சர் வெளியிடு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 May 2022

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் அமைச்சர் வெளியிடு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் CII மற்றும் Young Indians இணைந்து சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் TMB வங்கி நிதி உதவியுடன்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.
 நிகழ்வில் 
 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்
இந்த புத்தகத்தை
பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்,ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.
சண்முகையா, ஸ்ரீவைகுண்டம்
எம்.எல்.ஏ.
ஊர்வசி அமிர்தராஜ், Young Indians சார்பாக தலைவர் சில்வியா ஜான், துணை தலைவர் ராஜேஷ், சாலை பாதுகாப்பு துறை தலைவர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad