பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 May 2022

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் 2021 22 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சாயர்புரத்தில் நடைபெற்றது.விழா தலைவராக பாலதண்டாயுதபாணி முதன்மை கல்வி அலுவலர் கலந்து கொண்டார் . மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் விழாப் பேருரை ஆற்றினார் நிகழ்வில் முன்னிலையாக வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர்,வட்டார கல்வி அலுவலர்  பாலசுந்தரி மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் ஆடல் பாடல்  நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து மாணவர்களை பெரிய பொறுப்புகளுக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். எத்தனையோ பதவிகளில் மாணவர் மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பண்ணைவிளை தூ. நா. தி. அ. க. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மண்டலம் கத்தோலிக்க பள்ளிகள் கண்கணிப்பாளர் பென்சிகர், பண்ணை சேகரம் தூ. நா. தி. அ. க. பள்ளிகளின் தாளாளர்  ஜான் வெஸ்லி, சாயர்புரம் சேகர குரு டேனியல் ஞானப்பிரகாசம்,
திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிச்சந்தர், ஸ்ரீவைகுண்டம் வட்டார வள மைய்ய பேற்பார்வையாளர்
 (பொறுப்பு )ஒருங்கிணைந்த கல்வி.
வனிதா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக
மொட்ட தாதன் விளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூ அதிசயராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில் இன்றைய சூழலில் விரல் நுனியில் அனைத்து தகவல்களை வைத்திருக்கும் ஆசிரியரை மாணவர்கள் ஒரு எப்போதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். காரணம் தற்போதைய சூழலில் மாணவர்கள் அளவிற்கு ஆசிரியர்கள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வதன் மூலம் தங்களை  தயார்படுத்திக் கொள்வதன் மூலமும் மாணவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பையும் மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் ஆகவும் மாற வாய்ப்பு உள்ளது. எனவே ஆசிரியர்கள் ஆகிய நாம் அனைவருமே அப்டேட் என சொல்லப்படும் தற்கால நிகழ்வுகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நல்லது என்று கூறினார்.
நிகழ்ச்சியில்
ஏரல் தூ. நா. தி. அ. க.
நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை
 எபனேசர் செல்வ சுந்தரி,
நைனார் புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
மாதவன்,
மாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்
ஜெப ரத்தினம்,
நடுவக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை
 மேரியின் ராய் செல்வி,
கோவங்காடு தூ. நா. தி. அ. க.
நடுநிலைப்பள்ளி கைத்தொழில் ஆசிரியை
 வான்மதி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad