மாநகராட்சியில் மேயர் தலைமையில் அவசர கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 May 2022

மாநகராட்சியில் மேயர் தலைமையில் அவசர கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 60வது வார்டுகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக சீரமைத்து மழைநீர் தேங்காதபடி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்,
ஹோலிகிராஸ் பள்ளி அருகில் இயங்கிவந்த ஆரம்ப சுகாதார மையம் சத்திரம் பகுதியில் மாற்றம் செய்ய இருந்ததை மீண்டும் அதே இடத்திலேயே அமைப்பதற்கும், சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக இருப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவது, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிரில் உள்ள உப்பு இலாக்காவிற்கு சொந்தமான மத்திய அரசு இடத்தை கனிமொழி எம்.பி மூலம் 10 ஏக்கர் கேட்டு பெற்றுக்கொள்வது, வீட்டுத்தீர்வை சம்மந்தமாக இணையதளம் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டு அதில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்து கொள்ளவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.
கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad