மாற்று திறனாளிகளுக்கு சுயம்வரம் .ஸ்ரீவை.சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 May 2022

மாற்று திறனாளிகளுக்கு சுயம்வரம் .ஸ்ரீவை.சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து நடத்திய சீர்மிகு சுயவரம்  இடம்  சாத்தான்குளம் செட் கோவில் நடைபெற்றது.நிகழ்விற்கு மாநிலத் துணைச் செயலாளர் பேர்சில் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பு சென்னை கருப்பையா தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி தாளாளர் நோபில் ராஜ் முன்னிலை வகித்தார்.
 ஸ்ரீவைகுண்டம்  சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 
நிகழ்ச்சியினை
 தொடங்கி வைத்து  உரையாற்றினார்.

நிகழ்வில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
சிவசங்கரன், 
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணை தலைவர் பூபதி,
 சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர்
ரெஜினி ஸ்டெல்லா ஜோசப், பாலா மருத்துவமனை டாக்டர் ஜெய்கணேஷ் ,காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோசப்(வடக்கு) பாலமுருகன்(தெற்கு)
சாத்தான்குளம்
இந்திய தேசிய காங்கிரஸ் 
நகர தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால், சீட்சை சேர்ந்த வழக்கறிஞர் குமார், பாலமுருகன்,அழகு லட்சுமி, சுகந்தி,ஜேம்ஸ் சரவணன்,மாரி பாக்கியம்,பாஸ்டர் பால் ஆபிரகாம்,அன்பாய் செல்வம் பிரின்சஸ், மருத்துவர் மதுரம் செல்வராஜ்,மகாராஜன் மார்ட்டின் மற்றும் மாற்று திறனாளி ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான மணமகன் மணமகள் அறிமுகம் நடைபெற்றதுடன் பரஸ்பரம் பிடித்தவர்கள் ஒருவருக்கொருவர் தேர்வு செய்து சட்ட ஆலோசனை படியும் தீர விசாரித்த பின்பே திருமணம் நடைபெறும் என்று  சுயம்வர குழுவினர் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad