அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற உள்ள மாணவர்கள் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 May 2022

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற உள்ள மாணவர்கள்

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த நான்கு நாள் நடைபெற்ற கராத்தே பயிற்சி முகாம் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டியில்  தலைமை நடுவராக சோபுக்காய்  கோஜுரியு கராத்தே டூ - இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார் செயல்பட்டார். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே வீரர்கள் ஆதர்ஷ் மற்றும் ஸ்னோவின் கட்டா சண்டை பிரிவில் தங்கப் பதக்கமும் பென்னி, கிஷன் ,கேஷவ் ,ஆகியோர் கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும் விஜய் கார்த்திக் ,ஆகாஷ் , ரோகித் அபிஷேக், கிஷோர் வெள்ளிப் பதக்கமும் ஜீவா,ஆகாஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கமும்  வெற்றி பெற்ற மாணவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்வில் கீதா மெர்டிக் மேல் நிலை பள்ளியின் தாலாளர் ஜீவன்,
சோபுக்காய்  கோஜுரியு கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்  சென்சாய் செந்தில்,  துணைத்தலைவர் சென்சாய் பாலாஜி, செயலாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம்  நடைபெறவுள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad