திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சாத்தான்குளம் தி மு க ஒன்றியம் சார்பில்
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
சாத்தான்குளம் (வடக்கு)ஒன்றிய செயலாளரான A.S.ஜோசப் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்,
A.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
நகர செயலாளரான
மகா.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக
மீன்வளம், மீனவர் நலத்துறை (ம) கால்நடை பராமரிப்புத்துறை
அமைச்சர்
அனிதா R.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில் சாத்தான்குளம் கூட்டு குடிநீர் திட்டம் பற்றியும், அரசு வழங்கும் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவது பற்றியும் கூறினார்.
இதைப்போல் பல்வேறு திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்களான மன்னை இளங்கோ மற்றும் பவித்திரன் கண்ணன் உடன்
கழக மாணவரணி து. செயலாளர் S.R.S.உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M. c.சண்முகையா,
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒ. செயலாளர்
செ.வெற்றிவேல்,
கழக மருத்துவர் அணி து.செயலாளர்
டேவிட் செல்வின்Ex. MLA
ஆகியோர் ஓராண்டு திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் இனிவரும் காலங்களில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினர்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட அனைத்து திமுக ஒன்றிய செயலாளர்கள்,
மாவட்ட அணி அமைப்பாளர்கள்
ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பேரூர் கழக செயலாளர் மற்றும் செயல்வீரர்கள்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்,
மாவட்ட பிரதிநிதிகள்,
ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர், நகர மற்றும் அணி நிர்வாகிகளுடன் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும்
ஒன்றிய பொருளாளர்
S.வேல்துரை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment