சிவகளையில் தூத்துக்குடி எம்.பி. தலைமையில் கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 May 2022

சிவகளையில் தூத்துக்குடி எம்.பி. தலைமையில் கிராம சபை கூட்டம்


தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவகளை கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்
அமைக்கப்பட்டு இருந்த மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் 
 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமையும் கனிமொழி எம்.பி.  பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற
கிராம சபை கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் பேசினர்.
கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், 
பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மகளிர் சுய உதவிக் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனைக்கு உதவிட வேண்டும்.
ஓய்வுபெற்ற 85 ஆயிரம் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள  ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும்.
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளில் கிடைக்கும் பொருட்களை பொது மக்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் சிவகளையிலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
தமிழக தொல்லியல் பல்கலைகழகம் சிவகளையில் அமைக்க வேண்டும்.
நூலகம் அமைக்க வேண்டும். 
வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தொடர்ந்து கனிமொழி பேசுகையில்,
உழைப்பாளர் தினத்தில் பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
ஆனால், பெண்கள் இல்லை எனில் சமூகத்தில் எந்த முன்னேற்றமும் வந்துவிடாது.
பெண்கள் உழைக்க கூடியவர்கள். இந்த சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடியவர்கள்.
 தமிழகத்தில்
நடைபெறும்  அகழ்வாராய்ச்சி மூலம் தமிழின் தொன்மையை கண்டறிவதற்கு   போராட வேண்டியிருக்கிறது.
 தமிழர்களுடைய தொன்மை நிலை நாட்டப்பட்டு விட்டால் நாம் தான் உண்மையான பூர்வகுடிகள்  என்பது தெரிந்து விடும் என்பதால் தடைகளை ஏற்படுந்துகிறார்கள்.
ஆனால்,
ஒவ்வொரு முறையும் அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது நம்முடைய தொன்மை  இரண்டாயிரம் மூவாயிரம் என்று தாண்டி போய்க் கொண்டே இருக்கிறது.
 ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கக் கூடிய பொருட்களை  அறிவியல் பூர்வமாக சோதனை செய்து அது எத்தனை வருஷத்துக்கு முந்தியது என்று கண்டுபிடிக்கப்படுகிறது
என்றார் .

பின்னர்,
கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், 
சிவகளையில் அகழாய்வு பணிக்காக தமிழக அரசால் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. 
 அப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad