கிராம சபை கூட்டத்தில் நிர்வாக மற்றும் பொதுநிதி செலவினங்கள், பொதுசுகாதாரம், ஊராட்சி சார்ந்த பணிகளுக்கான நிதி செலவு, நமக்கு நாமே திட்டம்,தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், வேளாண்மை உழவர் நலத்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான உதவி பெறும் வாய்ப்புக்கள் பற்றியும், விவசாயிகள் கடன் அட்டை,பொது மின்சார தகன மேடை மேலும் புதுக்கோட்டை ஊருக்குள் சாலை வசதி கள் ஏற்படுத்தி தரவும்,ஆர். சி. மண்டபம் அருகில் உள்ள பாலம் சார்ந்த வேலை விரைவில் முடிக்கவும் ஆக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.
மேலும் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் துணை தலைவர் முப்பிலியான், ஊராட்சி செயலாளர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment