ஆழிகுடியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 May 2022

ஆழிகுடியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்


தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆழிகுடி ஊராட்சிக்குட்பட்ட நூலக கட்டிடத்தில் நடைபெற்ற மாவட்ட  ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.  பொதுமக்களிடமிருந்து பட்டா, ஓ. ஏ. பி, மாட்டு கொட்டகை, இலவச தையல் மிஷின்,
மின்சாரம் சார்ந்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
மேலும் தாமிரபரணி கரையோரம் நடப்பட்டிருந்த 80 மர கன்றுகளையும்,
 ஆழிக்குடியிலுள்ள திரு ஆழி பாறை எனப்படும் புராண கால பாறையையும் பார்வையிட்டார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, ஊராட்சி தலைவர் முத்து, தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் முத்தரையர்,கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த ஜோதி, வட்டார வளர்ச்சி aluvalar(வட்டார வளர்ச்சி )செல்வி, கிராம வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா,பொறியாளர் சித்திரை சேகர்,பணிமேற்பார்வையாளர் சிவகுமார் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad