நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி விளையாட்டு விழாவில்
காவல் நிலையை ஆய்வாளர் பட்டாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
உரையாற்றினார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசு கேடயங்களை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருள்ராஜ் பொண்ணு துறை விழாவிற்கு தலைமை தாங்கினார்.
கல்லூரியின் நிதி காப்பாளர் தோரியம் குளோரி யம் அருள்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆண்களுக்கான தனிநபர் கோப்பையை வேதியல் துறையில்
முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ராஜசிங் சுரேஷ் பெற்றார்.
பெண்களுக்கான தனி நபர் கோப்பையை வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி அபிஷா ஹெலன் பேபி பெற்றார். ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தை மூன்றாமாண்டு மாணவர்களும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தை இரண்டாமாண்டு மாணவிகளும் பெற்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லண்ட் ஆண்டின் விளையாட்டு அறிக்கை சமர்ப்பித்து நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின் பெயரில் உடற்கல்வி இயக்குனர் மற்றும் குறியீட்டாளர் அற்புதராஜ்,பேராசிரியர் ஜூட் லிவிங்ஸ்டன், பேராசிரியைகள் பிரமிளா அன்பரசி, பியூலா ஹேமலதா மற்றும் மாணவ மாணவர்கள் அனைவரும் செய்திருந்தனர்
No comments:
Post a Comment