டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் தூத்துக்குடி விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி .எம் .எம் கல்லூரியில் நடைபெற்றது. இணைய வழி மூலமாக நடைபெறக்கூடிய இந்த சிறப்பு பயிற்சியில் சிறப்பு விருந்தினராக பெஞ்சமின் பிராங்கிளின் கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் வரவேற்புரை வழங்க, கல்லூரி இயக்குனர் முனைவர் கோபால் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர் பெஞ்சமின் பிராங்கிளின் தனது சிறப்புரையில் எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் அரசு வேலைக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில் 165 மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அனைத்துப் பாடங்களையும் அதற்குரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்தால் எளிய முறையில் வெற்றி நிச்சயம் என்பதையும் எடுத்துரைத்தார்.
டி.என்.பி.எஸ்சி தேர்வு தொடர்பான தங்களது சந்தேகங்களை அனைத்து மாணவ மாணவிகளும் கேட்டு தெளிவு பெற்றனர், மிகக் குறைந்த கட்டணத்தில் ஆண்டு முழுவதும் இணையதளம் மூலமாக தங்களின் பயிற்சி பற்றி விளக்கினார், ஆங்கிலத் துறை பேராசிரியர் கண்ணன் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியிலுள்ள அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment