தூத்துக்குடி மாவட்டம் வாகை குளத்தில் அமைந்துள்ள ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்தில் ICAR வேளாண் அறிவியல் நிலையமும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையும் இணைந்து நடத்திய கடன் அட்டை வழங்கும் விழாவில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்காட் கே.வி.கேவின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் டி .மாசாணச் செல்வம் வரவேற்புரை வழங்கினார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய பெருந்தலைவர் ஏ.வசுமதி அம்பாசங்கர் தலைமை உரையாற்றினார் .தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் எஸ். ஐ .முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியாரம்மாள், தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் மாநில அரசு திட்டம் பழனி வேலாயுதம், வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் கே ஜெயசெல்வன் இன்பராஜ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் டி.டேனிஸ்டன், தோட்டக்கலை துறை தோட்டக்கலை துணை இயக்குனர் எம். சுந்தர்ராஜன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஆர்.கே .சுரேஷ் ராமலிங்கம், எஸ்.பி.ஐ மேலாளர் துரைராஜ், தூத்துக்குடி கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சி .எல். சிவகாமி, தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் மத்திய அரசு திட்டத்தின் அலுவலர் டி.நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனை தொடர்ந்து இயற்கை விவசாயத்தைப் பற்றி தொழில்நுட்ப வல்லுநர் தோட்டக்கலைத்துறை பி வேல்முருகன் உரையாற்றினார், ஏ முருகன் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், பீ.கே. முத்துக்குமார் மானாவாரி பயிர்களில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். மன இயல் துறையில் தொழில்நுட்ப வல்லுநர் எஸ்.சுமதி நன்றியுரை வழங்கிட விழா இனிதே நிறைவுற்றது .
விழாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கான ட்ரோல் அமைப்பிலான இயந்திரம் பற்றியும்,நவீன டிராக்டர்கள் பற்றியும் கண்காட்சிகள் நடைபெற்றன, மேலும் பயிர் ஊட்டச்சத்து மிக்க உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான உயிர் உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் இவைகள் பற்றியுமான விழிப்புணர்வு கருத்தரங்கு அதனைத் தொடர்ந்து கண்காட்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிறைவாக தென்னை மரம் ஏறுதல் துணையாக உள்ள புதிய ரக கருவிகளை விவசாயிகளுக்கு செயல் முறைப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment