அமலிநகர் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் உலக புத்தக தின விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 April 2022

அமலிநகர் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் உலக புத்தக தின விழா.

திருச்செந்தூர் அமலிநகர் ஆர்சி தொடக்கப்பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு  வட்டார அரசு பொது நூலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் இணைந்து  நடத்திய மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி கதைசொல்லும் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா ஏப். 27ம் தேதி மாலை நடைபெற்றது.


விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நல் நூலகர், நூலக செம்மல் மாதவன் வரவேற்புரை வழங்கினார்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்  கதிரேசன்  பரிசு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். 


நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட  வாசிப்பு இயக்க தலைவர் கோ .சந்திரசேகர் ,பொருளாளர்  ஜெகநாத பெருமாள் ,அமலிநகர் நகர்மன்ற உறுப்பினர்கள்  முத்து ஜெயந்தி, லீலா, திருமா பயிலகம் விடுதலைச்செழியன், ரகுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad