நட்டாத்தி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது, இதற்கு ஊராட்சி தலைவர் சுதா கலா தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் எஸ். வி.பி .எஸ் .பண்டாரம், ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் ஆர். விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி அளவிலான வள அலுவலர்களை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அமர்சேவா சங்கம் சார்பில் பிசியோதெரபி பற்றிய விழிப்புணர்வை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெற்றனர் .மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் சிறப்பு குழந்தைகளுக்குமான பயிற்சிகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் தரப்பட்டது.
பண்டாரம், அன்னக்கனி, சரோஜா, ஜான்சிராணி, பிரியா, சுப்புலட்சுமி மற்றும் ஊராட்சி செயலர் முத்துராஜ் உடன் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் நிறைவாக அனைவருக்கும் வெயிலுக்கு ஏற்ற வகையில் குளிர்பானம் தரப்பட்டது.
No comments:
Post a Comment